ஐஸ்வர்யா ராய் மகளுக்கும் வாய்ப்பு கொடுத்த மணிரத்னம்! தற்போது உடைந்த உண்மை
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யாவிற்கு இயக்குனர் வாய்ப்பு கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுளளது.
பொன்னியின் செல்வன்
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாகவிருக்கின்றது.
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதுடன், பல சுவாரசியமான தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய், இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து மிகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மகளுக்கு கிடைத்த வாய்ப்பு
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை பார்க்க தனது மகள் ஆராத்யா அவ்வப்போது உடன் வருவார் என்றும் அப்போது மணிரத்னம் தனது மகளுக்கு ’ஆக்சன்’ என்று கூறும் வாய்ப்பை கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது மகள் தன்னிடம் கூறியபோது எனக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு ’ஆக்சன்’ என்று கூறியது ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா என்ற தகவல் ரசிகர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        