சில நேரங்களில் இது தேவை...ஐஸ்வர்யாவால் மீண்டும் புலம்பும் ரசிகர்கள் - தீயாய் பரவும் மகன்களின் புகைப்படம்
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள 'தி கிரே மேன்' திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது.
'தி கிரே மேன்' ப்ரீமியர் நிகழ்ச்சியில் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகன்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துள்ள மகன்களுடன் ஐஸ்வர்யா புகைப்படம் எடுத்துள்ளார்.
சில நேரங்களில் உங்களுக்கு தேவையானது
இரண்டு மகன்களையும் கட்டி பிடித்துக்கொண்டு சில நேரங்களில் உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே எனபதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து பிரிந்து வாழும் இந்த ஐஸ்வர்யா - தனுஷ் ஜோடி இணைந்து வாழ வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில், இருவரது குடும்பத்தினரும் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.