3 கோடி பொருட்கள் கொள்ளை! ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணையா?
பன்முக திறமை கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை மேற்கொள்ள திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்குனர், பின்னணி பாடகி, நடனகலைஞர் என பன்முக திறமை கொண்டவர் ஆவார்.
இவரது வீட்டில் அரங்கேறிய கொள்ளை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 60 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகள் திருட்டு போயுள்ளதாகவும், சுமார் 3 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் இந்த கொள்ளை சம்பவத்திற்கு தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று ஐஸ்வர்யா மூன்று பேரின் பெயரை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யாவிடம் விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தினை இயக்கி வரும் நிலையில், இதில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுக்கப்பட்டதாகவும், 25 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில், நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றதுடன், கதைக்கு ஏற்ப தாசில்தார் அலுவலகத்தின் பெயர் பலகையும் மாற்றப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் மக்கள் கூட்டமும் நிரம்பியுள்ளது.
மேலும் செல்லும் பாதையை கயிறு கட்டி இடையூறு ஏற்பட்டுள்ளதால், இதனை கேள்விப்பட்ட திருவண்ணாமலை ஆட்சியர் ஐஸ்வர்யாவை விசாரணைக்கு வருவதற்கு உத்தரவு போட்டுள்ளாராம்.
குடும்பத்தில் பிரச்சினை, வீட்டில் கொள்ளை, படப்பிடிப்பில் பிரச்சினை அடுத்தடுத்து பிரச்சினையில் சிக்கும் ஐஸ்வர்யாவிற்கு நேரம் சரியில்லையா? என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.