நிம்மதி தேடும் ஐஸ்வர்யா! மாப்ள முடிவை மாத்துங்கனு சொன்ன ரஜினியின் பதிலுக்கு அவர் செய்த செயல்!
அன்புச்செழியன் வீட்டு விசேஷத்தில் தனுஷ் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதால் திருமணத்திற்கு வரவில்லையாம். அதே சமயம், தற்போது திருமணத்திற்கு வந்தால் ஐஸ்வர்யா பற்றி கேட்பார்கள்.
ரஜினியை சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக ரஜினியை சந்திப்பதை தவிர்க்கவே தனுஷ் ஹைதராபாத்திலேயே இருந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினியை தவிர்க்க தன் படத்தை தயாரித்தவரின் வீட்டு விசேஷத்தை தவிர்த்து ரிஸ்க் எடுத்திருக்கிறார் தனுஷ்.
முன்னதாக தனுஷுக்கு போன் செய்து மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழுமாறு கூறினாராம் ரஜினி. ஆனால் தனுஷோ அதற்கு பதில் அளிக்கவில்லையாம்.
மாறாக தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தாராம். எந்த வீட்டில் தான் பிரச்சனை இல்ல மாப்ள, பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழப் பாருங்கள் என்று அறிவுரை வழங்கினாராம்.
அதையும் தனுஷ் கண்டுக்கொள்ள வில்லையாம்.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, சிறிது கால ஓய்விற்கு பின்னர் காதலர் தினத்தை முன்னிட்டு ரொமாண்டிக் பாடல் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் இறங்கினார்.
அந்த பாடலின் படப்பிடிப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில், "பல வருடங்கள் கழித்து இந்த அழகிகளில் ஒருவரைக் கையாள்வதில் உள்ள மகிழ்ச்சி என கேமராவை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கலவையான உணர்வுகள் மீண்டும் வேலைக்குத் திரும்பியது. உங்கள் அனைவருக்கும் நன்றி மட்டும் சொன்னால் போதாது" என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா தங்களுக்கு பிடித்ததை செய்து நிம்மதியாக இருந்தால் போதும் என வாழ்த்தி வருகின்றனர்.