இவ்வாறானவற்றை ஆதரிக்கலாமா? ஐஸ்வர்யா ராஜேஷின் பதிவை கண்டித்த நெட்டிசன்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆஸ்திரேலியா சென்று டொல்பின்களுடன் விளையாடி ஒரு காட்சியை இணையத்தில் பதிவிட்டிருந்தார் அந்தக் காட்சிக்கு நெட்டிசன் கமெண்ட் சொல்லியிருந்த விதம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்.
இவர் வடசென்னை, கனா, அட்டகத்தி, காக்கா முட்டை, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்கள் இவரை மிகவும் பிரபலமாக்கியது.
தமிழ் மொழியை கடந்து மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், தற்போது கூட ஜி.வி.பிரகாஷுடன் டியர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஆதரிக்க வேண்டாம்?
இந்நிலையில், கடந்த மாதம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்று பயணம் சென்றிருந்த ஐஸ்வர்யா அங்கு டால்பினுக்கு உணவளித்து குதுகலித்த காட்சிகளை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன் ஒருவர் கண்டித்திருக்கிறார். அதில் இவ்வாறான தீம் பார்க்குகளை ஆதரிக்க வேண்டாம் எனவும் இது போன்ற பிரபலங்கள் வணிக கட்டமைப்புகளை ஆதரிப்பது இந்த உயிரினங்களுக்கு உலகத்திலிருந்து இயற்கைக்கு மாறாக அப்புறப்படுத்தி விடும்.
டால்பின் போன்ற உயிரினங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக தண்ணீர் குளங்களில் அடைக்கப்பட்டு கொடுமையை அனுபவித்து வாழ்கின்றன.
அதுமட்டுமல்ல டால்பின்கள் சிறு குஞ்சுகளாக பிடிக்கப்பட்டு தாய் தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு தான் கூண்டுகளில் அடைக்கப்பட்டு வாழ்கின்றன அதனால் இவற்றை ஆதரிக்க வேண்டாம் என்று கமெண்ட் செய்திருந்தார். இவரின் இந்த கமெண்டுக்கு பலரும் பல லைக் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |