பட்டு சேலையில் சொக்கவைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் புதிய புகைப்படங்கள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பட்டு புடவையில் குடும்ப பாங்காக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்சி தொகுப்பாளினியான மீடியா துறையில் என்ரீ கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட ரியாலிட்டி நிகழ்சியின் மூலம் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர்களும் இவர்களும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அட்டகத்தி படத்தில் அமுதா கதாபாத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து காக்கா முட்டையில் இரு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார். இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றது.
பின்னர் வடசென்னையில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
சினிமாவில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களையே தெரிவு செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மை காலமான கிளாமர் கதாப்பாத்திரங்களின் மீதும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
இந்நிலையில் அழகிய பட்டுசேலையில், அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |