இயக்குனர் மணிரத்னத்தை ஓடிவந்து கட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராய்! வைரலாகும் காட்சி
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொன்னியின் செல்வன்
இயக்குனர் மணிரத்னம் பார்த்து பார்த்து ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் சிலை போல் வடித்து உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து பிரபலங்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கோலிவுட் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இந்த இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.
நடிகை ஐஸ்வர்யா ராய்
மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தில், மிக முக்கிய கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இப்படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக, மும்பையில் இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காணொளி வைரலாகி வருகின்றது.
உலக அழகி பட்டத்தை சூடிய பின்னர், ஐஸ்வர்யா ராய்க்கு முதல் முதலில் பட வாய்ப்பு கொடுத்து திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்னம் தான்.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா ராய், தனது குரு இயக்குனர் மணிரத்னத்தை கண்டதுமே, கட்டி பிடித்து தன்னுடைய அன்பை பரிமாறி கொண்டுள்ளார்.
The way she ran to her Mentor and that wholesome hug to her Guru. Respect ?
— Kat_yayani? (@Kat_yayani0098) September 6, 2022
AISH u stole my ❤️ #PonniyinSelvan #PS1Trailer pic.twitter.com/O8XGdm8OVH