ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக நான் தான் நடிக்கவிருந்தேன்: 23 ஆண்டுகளுக்கு பிறகு உண்மையை சொன்ன துணிவு பட நடிகை
ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக நான் நடிக்கவிருந்த படம் தான் இது என 23ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை கூறியிருக்கிறார் மஞ்சு வாரியர்.
மஞ்சு வாரியர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். அண்மையில் இவரது துணிவு திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக சாதனைப் படைத்தது.
இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் தெலுங்கு நடிகை மஞ்சு வாரியர். இவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இருந்த அசுரன் படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும், இவரை மலையாள திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவருக்கு மலையாள மக்களின் ஆதரவு போல தமிழ் மக்களின் ஆதரவு பெருமளவாகவே உள்ளது.
ஐஸ்வர்யாராய்க்கு பதில் நான்
உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் அப்போதும் இப்போதும் தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகையாக இருப்பவர்.
இவர் நடிப்பில் 2000ஆம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் அப்போது வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், அந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க விருந்து அவர் இல்லையாம். அவருக்கு பதிலாக முதலில் நடிக்க விருந்து நடிகை மஞ்சு வாரியர் தான் நடிக்கவிருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முதன் முதலில் நான் தான் அந்தப்படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் ராஜீவ் மேனன் முதலில் என்னையே கேட்டிருந்தார்.
நான் அந்த சமயம் சில மலையாள படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலவில்லை என கூறியிருக்கிறார்.