அபிஷேக் பச்சனை பிரிந்தாரா ஐஸ்வர்யா ராய்... சர்ச்சைக்கு கிடைத்த முற்றுப்புள்ளி
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரிந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் தம்பதி
பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் அமிதாப் பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன். இவர் பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராயை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் தாயிக்கும் இடையே சண்டை என்பதும் பல ஆண்டுகளாக இருவரும் பேசிக்கொள்வதில்லை... ஒரே வீட்டில் இருந்தும் ஐஸ்வர்யா ராய் கணவரை பிரிந்து தனியாகவே இருந்தார் என்று கூறப்படுகின்றது.
மேலும் அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் வெளியே தகவல் கசிந்துள்ளது. அமிதாப் பச்சன் மருமகள் ஐஸ்வர்யா ராயை அன் ஃபாலோ செய்துவிட்டதாகவும் ரசிகர்கள் கிளப்பி வந்தனர்.
இந்நிலையில் சர்வதேச பள்ளி ஆண்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சனும் அபிஷேக் பச்சனும் ஒன்றாக கலந்துகொண்ட நிலையில், இருவரும் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
ஐஸ்வர்யா ராய் அவரது தாயுடன் வந்த நிலையில், அபிஷேக் பச்சன் அவரது தந்தையுடன் வந்துள்ளார். பின்பு நிகழ்ச்சி முடிந்த பின்பு இருவரும் சேர்ந்து கிளம்பியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |