50 வயதிலும் பேரழகியாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யாராய்: லேட்டஸ்ட் புகைப்படங்களை கலாய்க்கும் நெட்டிசன்கள்
நடிகை ஐஸ்வர்யா ராய் இணையத்தில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
நடிகை ஐஸ்வர்யா ராய்
உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் அப்போதும் இப்போதும் தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகையாக இருப்பவர்.
தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதற்கு பிறகு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார், இருவருக்கும் ஆராத்யா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.
தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஐஸ்வர்யா ராயை கலாய்க்கும் நெட்டிசன்கள்
அண்மையில் மும்பையில் நடந்த L'Oreal நிகழ்வில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துக் கொண்டார்.
இந்த நிகழ்விற்கு அவர் வெள்ளை எம்பிராய்டரியுடன் வடிவமைக்கப்பட்ட கருப்பு நிற உடையில் சென்றிருந்தார். இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட அவர் சில புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் புகைப்படத்தில் அவர் குண்டாகவும் அடையாளம் தெரியாத அளவிற்கு வேறு மாதிரியாகவும் இருந்த புகைப்படத்தை பதிவிடாமல் வேறு புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்ததாகவும் புகைப்படங்களை ஒப்பிட்டு பலர் கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் இந்தப் புகைப்படங்கள் சர்ச்சைகளுடன் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |