விபத்துக்குள்ளான ஐஸ்வர்யா ராய் கார்- சம்பவ இடத்தில் இருந்து வெளியான காணொளி
ஐஸ்வர்யா ராய் காரில் பேருந்து மோதியதாக சமூக வலைத்தளங்களில் காணொளியுடன் செய்தி வெளியாகி வருகின்றது.
ஐஸ்வர்யா ராய்
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.
அதன் பின்னர் ஒரு சில படங்கள் மாத்திரம் தமிழில் நடித்து விட்டு, பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.
தமிழில் இவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
வைரலாகும் வீடியோ
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் கார் விபத்தில் சிக்கியதாக சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
விபத்தின் போது வெளியான காணொளியில், ஐஸ்வர்யா ராய் இருப்பது போன்று தெரியவில்லை. அத்துடன் காருக்கும் பெரிதாக சேதம் எதுவும் காருக்கு ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஐஸ்வர்யா ராய் காரை அங்கிருந்து செல்ல அனுமதி கொடுத்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |