படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராய்யிடம் அடி வாங்கிய பிரபல நடிகர்? ஷாக்கான ரசிகர்கள்
படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராய்யிடம் தமிழ் நடிகர் ஒருவர் அடி வாங்கிய தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய்
1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் ஐஸ்வர்யா ராய். இப்பட்டம் இவர் சினிமாவில் நுழைய வாய்ப்பாக அமைந்தது. இதனையடுத்து, இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்தார் ஐஸ்வர்யா ராய்.
இவர் பிரபல நடிகர் சல்மான்கானுடன் கிசுகிசுக்களில் அடிப்பட்டார். இதனையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், நட்சத்திர நடிகர் அமிதாப் பச்சன் மகன், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார். இத்தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
ஐஸ்வர்யா ராய்யிடம் அடி வாங்கிய நடிகர்?
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நடிகை ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவரை அரைந்ததாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. கண்ட இடத்தில் கை வைத்ததால் நடிகை ஐஸ்வர்யா ராய் அந்த நடிகரை அடித்ததாகவும், அவர் சாக்லெட் ஹீரோ என்று சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராய்யிடம் அடி வாங்கியது ஒருவேளை பிரசாந்த்தாக இருக்குமோ அல்லது அப்பாஸ்ஸாக இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இச்சம்பவம் உண்மையில் நடந்ததா என்பது குறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை.