தனுஷை பழிவாங்க சிம்புவுடன் மீண்டும் சேரும் ஐஸ்வர்யா - பக்க ப்ளான் என்ன தெரியுமா?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், தொடர் பிரச்சினை காரணமாக விவாகரத்து பெறுவதாக ட்விட்டரில் அறிவித்து தனிமையில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை சேர்த்து வைக்க என்னதான் குடும்பத்தினர்கள் பாடுபட்டாலும், இவர்கள் வேலையில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

தனுஷ் விடாப்பிடி
ஒரு பக்கம் ஐஸ்வர்யா இறங்கி வந்தால் தனுஷ் விடாப்பிடியாக இருக்கிறாராம். இதனால் ஐஸ்வர்யா அப்பாவுக்காக சேர நினைத்தாலும் தனுஷின் செயலைக்கண்டு ஆத்திரத்தில் இருக்கிறாராம்.
உடல் நிலை சோர்வின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் ஐஸ்வர்யா தனுஷை வெறுப்பேற்ற ஒரு வேலையை செய்ய முடிவெடுத்து இருக்கிறாராம்.
அதன்படி ஏற்கனவே மூன்று படங்களை இயக்கிய அவர், தற்போது ஒரு ஆல்பம் பாடலையும் இயக்கியிருந்தார்.

சிம்புவுடன் இணையும் ஐஸ்வர்யா
இந்த நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.
இந்த படத்தில் ஹூரோவாக சிம்புவை நடிக்க வைக்க முடிவு எடுத்து இருக்கிறார். ஏனென்றால் தொழில் ரீதியாக தனுஷை பின்னுக்கு தள்ள சிம்பு காத்து கொண்டிருக்கிறார்.
மேலும் சிம்பு, ஐஸ்வர்யா காதலித்து பிரிந்த தகவல்கள் எல்லாம் ஏற்கனவே தெரிந்தது தான்.
பழைய காதலனை வைத்தே இனி ஐஸ்வர்யா ஆட்டத்தை ஆரம்பிப்பார் என நெட்டிசன்களும் கருத்து கூறி வருகின்றனர்.
இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிமே வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.