விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவு! இதில் தனுஷ்ம் சம்பந்தம் இருக்கா ?
சமீபத்தில் நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தும் பலன் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஆனாலும் தந்தையின் ஆசைக்காக ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் வாழ விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம, நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இந்நிலையில், ‘முசாபிர்’ விரைவில் வெளியாகப் போவதாக ஒரு போஸ்டரை இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார்.
அந்த போஸ்டரில் சாலையின் நடுவே ஒரு இரு சக்கர வாகனம் நிற்கிறது. அதை பார்த்ததுமே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் ஓட்டிய அந்த அதிசய இரு சக்கர வாகனம் தான் ரசிகர்கள் அனைவருக்குமே நினைவிற்கு வந்துள்ளது.
தனுஷை விட்டுப் பிரிந்தாலும் முசாபிரில் அவரை கொண்டு வந்திருக்கிறார் ஐஸ்வர்யா என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
முசாபிர் தொடர்பான வீடியோக்கள், போஸ்டரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று பெயர் இருந்தாலும், இந்த இரு சக்கர வாகனம் ஒன்று போதும் அண்ணி. சீக்கிரம் தனுஷ் அண்ணாவுடன் சேர்ந்து விடுங்க என்று ரசிகர்கள் ஏகத்தோடு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.