காதல் கணவரின் பிறந்த நாளை கொண்டாடிய அர்ஜுன் மகள்- வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கடந்த 2013 -ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். அவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா- உமாபதி
படவாய்ப்புகள் சரியாக அமையாததால், அர்ஜுன் தொகுத்து வழங்கிய, 'சர்வைவர்' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் நடிகர் தம்பி ராமய்யா மகன் உமாபதிக்கும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது.

இதை தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அண்மையில் ஐஸ்வர்யா- உமாபதியின் பாரிஸிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகியது.
இந்த நிலையில் தற்போது தனது காதல் கணவனின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        