குடும்ப மானம் போகுது.. என் மகளை Bigg boss-லிருந்து வெளியில் அனுப்புங்கள்- ஐஷூவின் பெற்றோர்
Bigg boss Set-க்கு சென்று தன் மகளை வெளியில் அனுப்புமாறு கூறிய ஐஷூவின் பெற்றோர்களால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
காதல் ஜோடி
Bigg boss சீசன்7-ல் இரண்டு காதல் ஜோடிகள் உருவாகியுள்ளனர். ஒன்று ரவீனா - மணி ஜோடி மற்றொன்று நிக்சன் மற்றும் ஐஷு ஜோடி இவர்கள் இணையவுலகில் ஹிட்டடித்த காதல் ஜோடி.
பிக்பாஸ் சீசன் 7 வீட்டிற்குள் டான்ஸர் ஆகும் கனவில் நுழைந்த ஐஷு, கானா மற்றும் ராப் பாடகரான நிக்சன் மேல் காதலில் விழுந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

சமூகவலைதளத்தில் வைரலான வீடியோவில் ஐஷு, கண்ணாடிக்குள் இருக்கும் நிக்சனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஐஷு நிக்சனை கிஸ் அடிக்க முயற்சிக்கிறார். ஆனால், கண்ணாடி தடுக்கிறது.
ஐஷுவின் பெற்றோர்கள்
இந்நிலையில் இதை Tv வழியாகப் பார்த்த ஐஷூவின் பெற்றோர் நொந்து போய், பிக்பாஸ் வீடு இருக்கும் சென்னை- பூந்தமல்லி EVP Set-க்கே சென்று, தங்கள் மகளை வெளியில் அனுப்புங்கள் என்று கெஞ்சியுள்ளனர்.

மேலும் தங்களின் குடும்ப மானம் காற்றில் பறப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளதை தொடர்ந்து, நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் ஐஷுவின் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளனர்.
மேலும் இந்த தகவலை தாங்களே சொல்லும் விதத்தில் சொல்லிவிடுவதாகவும் கூறி, எந்தவொரு எமர்ஜென்சி காரணமும் இல்லாமல் வெளியில் அனுப்பமுடியாது என்றும்,கூறியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        