திடீரென ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண உயர்வு - அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீப காலமாக கட்டணங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும், ஏர்டெல், அதன் கட்டண விகிதங்களில் மீண்டும் மாற்றம் செய்துள்ளது.
இது குறிப்பாக ப்ரீபெய்டு கட்டணங்களை 25% அதிகரித்துள்ளது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி கட்டண அதிகரிப்பானது நவம்பர் 26 முதல் மீண்டும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏர்டெல் நிறுவனத்தின் அர்பு விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 200 - 300 ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதுவித கட்டண இந்த கட்டண அதிகரிப்பினால் இனி, 79 ரூபாய் திட்டமானது 99 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்,, இது 28 நாட்களில் வேலிடிட்டி கொண்ட ஒரு திட்டமாகும். இதில் 200 எம்பி டேட்டா, லிமிடெட் கால் சேவையும் உண்டு. இதே 149 ரூபாய் மதிப்பிலான திட்டம், இனி 179 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், 2ஜிபி டேட்டா வழங்கப்படும். இதேப்போல், இதே 219 ரூபாய் திட்டத்தினை, 265 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது 28 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1 ஜிபி டேட்டா கிடைக்கும். பின் 249 ரூபாய் திட்டத்தினை, 299 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது 28 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த புதிய கட்டண விதிமுறையால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.