ஐ.பி.எல். 2024.... விசேஷ சலுகைகளை அறிவித்தது Airtel
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ஒட்டி பாரதி ஏர்டெல் நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏர்டெல் சிறப்பு சலுகை
ஐ.பி.எல் 2024 கிரிக்கெட் தொடரை ஒட்டி ஏர்டெல்லில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டதுடன், பழைய சலுகைகளின் விலையும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் பலன்களும் சற்று மாற்றப்பட்டுள்ளது.
ஏர்டெல் ரூ. 49 மற்றும் ரூ. 99 சலுகைகளின் விலை முறையே ரூ. 39 மற்றும் ரூ. 79 என மாற்றப்பட்டு இருக்கிறது.
இந்த இரண்டு சலுகைகளும் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடருக்காக மாற்றப்பட்டு இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் ரூ. 39 விலை சலுகையில் 20 ஜி.பி. டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும்.
ஏர்டெல் ரூ. 49 விலை சலுகையில் வின்க் பிரீமியம் சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில் நாள் ஒன்றுக்கு அன்லிமிடெட் டேட்டாவாக அதிகபட்சம் 20 ஜிபி வழங்கப்படுவதுடன், ரூ.79க்கு அன்லிமிடேட் டேட்டா அதாவது அதிகப்பட்சம் 20 ஜிபி இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகின்றது.
இந்த சலுகையின் மூலம் பயனர்களுக்கு 40ஜிபி டேட்டா கிடைப்பதுடன், முதல் நாள் 20 ஜிபி முடிந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டுவிடும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |