Airtel நிறுவனம் கொடுத்த ஷாக்! தாறுமாறாக எகிறிய Recharge கட்டணம்
ஏர்டெல் நிறுவனம் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தினை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம்
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக செயல்பாட்டு வருகிறது ஜியோ. நாடு முழுவதும் தற்போது 5ஜி சேவையை வழங்கிவரும் இந்நிறுவனம், இதற்காக 4 ஜி கட்டணத்தையே வசூலித்து வருகின்றது.
சமீபத்தில் ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பு ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அதாவது இந்தியாவில் லோக்சபா தேர்தல் முடிந்த பின்பு டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து ஜியோ தனது கட்டணத்தை உயர்த்திய நிலையில், ஏர்டெல் நிறுவனமும் உயர்த்தியுள்ளது. அதாவது 10 முதல் 21 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் அடிப்படை ரீசார்ஜ் பேக் ரூ.179-க்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கியிருந்தது.. தற்போது இந்த கட்டணம் 199 ரூபாயாக உயர்ந்துள்ளதாம்.
ப்ரீபெய்டு மட்டுமின்றி போஸ்ட்பெயிடும் கட்டணங்களையும் 12 முதல் 27 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஜியோ நிறுவனம் இரண்டரை ஆண்டுக்கு பின்பு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இந்த கட்டண உயர்வதானது வரும் ஜுலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வோடபோன், ஐடியா நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வேலிடிட்டி | டேட்டா/ அழைப்பு | ஜியோ | ஏர்டெல் |
28 நாட்கள் | 1 ஜிபி | 249 | 299 |
56 நாட்கள் | 2 ஜிபி | 629 | 649 |
84 நாட்கள் | 2 ஜிபி | 859 | 979 |
365 நாட்கள் | 2.5 ஜிபி | 3599 | 2 ஜிபி / 3599 |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |