பிரம்மாண்ட உணவகமாக மாறிய விமானம்: மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
இந்திய மாநிலமான குஜராத்தில் வதோதராவில் விமானம் ஒன்றினை பிரம்மாண்டமான ஹொட்டலாக மாற்றி வடிவமைத்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ்-320 ரக விமானம் ஒன்று வாங்கப்பட்டு, விமானத்தின் ஒவ்வொரு பாகமும் வதோதராவுக்கு கொண்டுவரப்பட்டு ஹொட்டலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், உணவகத்திற்குள் வரும் வாடிக்கையாளருக்கு நிஜ விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியன், மெக்சிகன், தாய், காண்டினெண்டல் உட்பட பல்வேறு வகையான உணவுகளும் இங்கு கிடைக்குமாம்.
குறித்த உணவகத்திற்கு வரும் வாக்கையாளர்களுக்கு விமானத்தில் இருப்பது போன்ற டிக்கெட் ஒன்று கொடுக்கப்படுகின்றது. ஒரே நேரத்தில் 106 பேர் இங்கு அமர்ந்து உணவருந்த முடிவதோடு, விமான பணியாளர்கள் போன்று உடையணிந்து உணவகத்தின் ஊழியர்கள் பணியாற்றுவது மேலும் மக்களை கவர்ந்துள்ளது.