நடுவானில் பறந்த விமானத்தில் திணறிய 7 வயது சிறுமி; பரிசோதனையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் Ayushi Punvasi Prajapati (7). இந்த சிறுமி தனது தந்தையுடன் தனது மருத்துவ சிகிச்சைக்காக லக்னோவில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளார். இதையடுத்து, விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சிறுமிக்கு திடீரெனெ உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனே, விமானம் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறுமியை சோதிப்பதற்காக தயாராக இருந்த மருத்துவ குழு சிறுமி விமானத்தில் இருந்து தரையிறக்கப்பட்டதும் அவரை சோதனை செய்துள்ளது. மருத்துவர்களின் சோதனையில், சிறுமி ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது.
மேலுல், சிறுமிக்கு ஹூமோகுளோபின் குறைபாடு இருந்ததால் விமானம் அதிக உயரத்தில் பறந்தபோது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அதனால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டநிலையில், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.