பனிபடர்ந்த அண்டார்டிகாவில் முதன்முறையாக தரையிறங்கி சாதனை படைத்த விமானம்
முதன் முறையாக அண்டார்டிகாவில் ஹை ஃப்ளை ஏவியேஷன் நிறுவனத்தின் விமானத்தை தரையிறக்கி சாதனை படைத்து இருக்கிறது.
எப்பொழுதும் பனியால் மூடப்பட்டு இருக்கும் இடம் தான் அண்டார்டிகா. சாதாரண மனிதன் எளிதில் அங்கு செல்ல முடியாத இடம். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், 2,500 நாட்டிகல் மைல்கள் தூரம் பறந்து, அண்டார்டிகாவில் உள்ள வுல்ப்ஸ் ஃபேங் (Wolf's Fang) நிறுவனத்தின் சாகச சுற்றுலா முகாமிற்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்த்தது.
அப்போது பனிப்பாறைகள் நிறைந்த அண்டார்டிகாவின் ஏர்பஸ் விமானம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
மேலும், விமானம் தரையிறங்கும் வகையில் தற்காலிகமாக இறங்குதளம் தயார் செய்யப்பட்டிருந்ததாகவும், தரையிறங்குவதில் ஏந்த பிரச்சனை ஏற்படவில்லை என்று அந்த விமானத்தின் விமானி கார்லோஸ் மிர்புரி தெரிவித்தார்.