கிராமத்து ஸ்டைலில் அயிரை மீன் குழம்பு - இப்படி செஞ்சு பாருங்க சுவை அசத்தும்
சுடு சாதத்தின் சுவையை அதிகரிக்கம் அயிரை மீன் குழம்பு கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

அயிரை மீன் குழம்பு
அயிரை மீன் குழம்பு என்றால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மீன் ஆறுகள் குளம், குட்டை, போன்ற நீர்நிலைகளில் பிடித்து சாப்பிடுவார்கள்.
அயிரை மீன் குழம்பு வைப்பது பல இடத்தில் பல வகைப்படும்.
இந்த நிலையில் கிராமமக்களின் கைபக்குவ சுவையில் மனக்கும் அயிரை மீன் குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை பதவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- அயிரை மீன்,
- பால்,
- உப்பு,
- புளி,
- கருவேப்பிலை,
- மாங்காய்,
- நல்லெண்ணெய்,
- சோம்பு,
- வெந்தயம்,
- சின்ன வெங்காயம்,
- வெள்ளை பூண்டு,
- தக்காளி,
- பச்சை மிளகாய்,
- மஞ்சள் தூள்,
- மிளகு தூள்,
- மிளகாய் தூள்,
- மல்லித்தூள்,
- சீரகத்தூள்

செய்முறை
அயிரை மீனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து பால் மற்றும் உப்பினை ஊற்றி 15 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பின்னர் அதன் வழுவழுப்புத்தன்மை போகும் வரை கழுவி எடுக்க வேண்டும்.
பின்னர் புளியை ஊற வைத்து, அடுப்பில் குழம்பு வைப்பதற்கு பாத்திரம் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கொண்டு எண்ணெய் சூடானதும் சோம்பு, வெந்தயம், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி நிறம் மாறிய உடன் மஞ்சள் தூள், மற்றும் மிளகாய் தூள் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

நன்றாக மிக்ஸ் செய்தவுடன் வெள்ளை பூண்டு, 4 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். இத்துடன் கால்கிலோ தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுதூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின் ஊற வைத்து புளியில் தண்ணீர் ஊற்றி கொண்டு கொதிக்க விடவும்.
கொதித்த உடன் நான்கு துண்டு மாங்காய் மற்றும் ஒரு கை அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு பின் கழுவி வைத்திருந்த அயிரை மீனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் குழம்பு தயார்.