நுரையீரலை பாதிக்கும் COPD... அதிகரிப்பதற்கு காரணம் என்ன?
மனிதன் வாழ அடிப்படையானது காற்று. சுத்தமான காற்றை சுவாசிக்கத் தான் எல்லோரும் விரும்புவார்கள். பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என இந்தியாவே தற்போது குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது.
COPD என்றால் என்ன?
காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்த செய்கிறது.நுண்துகள்கலானது சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவி, வீக்கம் மற்றும் திசு சேதத்திற்கு வழிவகுக்கிறது.
Chronic obstructive pulmonary disease (COPD) என்பது நாள்பட்ட நுரையீரல் அழற்சி ஆகும். நுரையீரலில் ஏற்படும் இந்த அழற்சியால் ஒரு நபர் சுவாசிக்க கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பல்வேறு ஆதாரங்களிலிருந்து வெளியிடப்படும் VOC களான Paints மற்றும் Solvents, காற்றுப்பாதைகளை எரிச்சலூட்டுவது மட்டுமின்றி COPD அறிகுறிகளையும் மோசமடைய செய்கிறது.
Nitrogen oxide gas ஆனது வாகனங்களில் இருந்து வெளியேறக்கூடியது. இவை காற்றுப்பாதை சுருக்கம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.
இதுபோன்ற மாசுபாடுகளை தொடர்ந்து சுவாசித்து வருவதினால் COPD அறிகுறிகளை மோசமாக்குவது மட்டுமின்றி நோய் முன்னேற்றத்தையும் துரிதப்படுத்தக்கூடும்.
COPD நோயாளிகளின் நிலையானது அடிக்கடி தீவிரமடையும் போதெல்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.
தடுப்பு நடவடிக்கைகளான உட்புறக் காற்றின் தரம் மூலம் வெளிப்பாட்டைக் குறைத்தல், மாசுபட்ட பகுதிகளில் முகமூடிகளை அணிதல் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு பரிந்துரைத்தல் போன்றவை மூலம் COPD அபாயங்களை குறைக்க முடியும்.
மாசுபாட்டிற்கும் COPD க்கும் இடையே உள்ள தொடர்பை மக்களிடம் கொண்டு செல்வது பல நோய்களிலிருந்து அவர்களை பாதுகாக்கக்கூடும்.
நுரையீரல் நோய் உள்ளவர்கள் உட்கொள்ளவேண்டிய உணவுகள்:
Green Tea: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ள Green tea நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து எளிதில் குணமாக்க உதவும். ஒவ்வாமையினால் ஏற்படும் Histamine அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
இஞ்சி: இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உகந்ததாகும்.நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் அதில் உள்ள மாசுக்களை நீக்குவதற்கும் உதவுகிறது.
முழு தானியங்கள்: Brown rice மற்றும் முழு கோதுமை போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் நுரையீரல் நோய்கள் ஏற்படுத்தும் அபாயத்தை தடுக்க முடியும்.
Virgin Olive Oil: Monounsaturated கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின்-கே உள்ளடங்கிய இதை சேர்த்து வருவது சிறப்பு.
Broccoli: Sulforaphane எனும் கலவை நுரையீரல் உயிரணுக்களில் காணப்படும் மரபணு செயல்பாட்டை அதிகரிக்கும் ஒன்று என்பதால் இதை நிச்சயம் சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |