AI தொழில்நுட்பத்தால் கிளம்பும் பீதி.. இனி தான் ஆட்டம் ஆரம்பம்- எச்சரிக்கை!
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் புது விளைவுகள் வரவுள்ளதாக Nvidia தலைமை செயல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமின்றி இந்தியாவிலும் AI தொழில்நுட்பம் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது ஆக்டிவாக இருக்கும் AI தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு பல வழிகளில் பயனர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறது.
AI தொழில்நுட்பத்தால் கிளம்பும் பீதி
இது தொடர்பில் தொழில்நுட்பத்தை அதிகம் பழக்கத்தில் வைத்திருக்கும் நிறுவனமான Nvidia தலைமை செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங் சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த நிறுவனம் கணினிகளுக்கு கிராபிக்ஸ் கருவிகளை வழங்கும் வேலையைச் செய்கிறது. ஜென்சென் ஹுவாங் பேசுகையில், "AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொழுது மனிதர்களின் வேலைகள் குறைந்து ஓய்வு நேரம் அதிகமாகி விடுகிறது என பலரும் நம்புகிறார்கள். ஆனால் தற்போது இருப்பதை விட நம்முடைய எதிர்காலம் அதிக வேலைபளுவுடன் இருக்கும். ஏனெனின் மனிதர்கள் ஒரு வேலையை செய்து முடிக்க அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
அதே சமயம், AI தொழில்நுட்பம் ஒரு வேலையை மிக விரைவாக செய்து முடிக்கிறது. இதனால் மனிதர்கள் தினமும் ஒரு புதிய யோசனையை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதன் விளைவாக தற்போது இருப்பதை விட எதிர்காலத்தில் கடும் வேலைபளுவுடன் இருப்போம்..” எனக் கூறியுள்ளார்.
மேலும், புது வேலைகளை உருவாக்கி கண்டுபிடிக்கப்படும் AI தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு வேலையிலும் மாற்றங்கள் ஏற்படும் இது உறுதி என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
