கிருஷ்ணரின் கை உடைந்ததாக மருத்துவமனைக்கு கதறியபடி வந்த முதியவர் - வைரலாகும் வீடியோ!
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா அரசு மருத்துவமனையில், கடந்த நாட்களுக்கு முன்பு லேக் சிங் என்ற பூசாரியான நபர் பெரிய துணி ஒன்றில் ஏதோ சுருட்டிக்கொண்டு கதறியபடி வந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் என்ன என விசாரித்த பின், அவர் சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். அதாவது அவர், தன் வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம் செய்துகொண்டிருந்தாகவும், அப்போது எதிர்பாராமல் கிருஷ்ணரின் கை உடைந்துவிட்டதாகவும், உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
இதனால், அவரின் கதறலைக் கண்டு பதறிய மருத்துவர்கள் அவருக்கு என்ன சொல்லியும் கேட்காததால், வேறு வழியில்லாமல் ஸ்ரீ கிருஷ்ணா என்ற பெயரில் நோயாளியின் பெயரை பதிவு செய்து உடைந்த கையை ஒட்ட வைத்து அனுப்பியுள்ளனர்.
அந்த நபர் கதறியகுட்டி கிருஷ்ணருக்கு ஏற்பட்ட நிலையைச் சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைலராக பரவி வருகிறது.
Devotion: Agra district hospital staff went through a perplexed situation on Friday, when a priest came wailing with an unusual request to bandage the broken arm of an idol of Laddu Gopal - the childhood form of Lord Krishna. (1/4) @pra0902 pic.twitter.com/bda3kPA4td
— Deepak-Lavania (@dklavaniaTOI) November 19, 2021