அகோரியை காதல் திருமணம் செய்த பெண் - ஆச்சரியத்துடன் பதறிப்போன மக்கள்
அகோரி சாமியார் ஒருவர் தனது சிஷ்யையை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சியை சேர்ந்தவர் அகோரி சாமியார் பாபா மணிகண்டன். காசிக்கு தனது இளம் வயதிலேயே சென்றுள்ளார். காசியில் அங்கேயே தங்கி சிவ பக்தனாக மாறி அகோரிகளுடன் சேர்ந்து பயிற்சி எடுத்துள்ளார்.
இதன்பின்னர், சில வருடங்களுக்கு பின்னர் மற்ற அகோரிகளோடு சேர்ந்து தமிழ்நாடு திரும்பி இருக்கிறார். தமிழ்நாட்டின் பல்வேறு சுடுகாட்டில் தங்கியிருந்த அவர், அதன்பின் தனது சொந்த ஊரான திருச்சியில், உள்ள அரியமங்கலம் அருகே உள்ள மக்களுக்கும் ஆசி வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, இரவில் சுடுக்காட்டிலேயே அடிக்கடி பூஜை செய்து வரும் இவரை, சந்திக்க பல சிஷ்யர்கள் சந்தித்ததால் அவர்களுக்கு சிறப்பு பயிற்ச்சிகளையும் வழங்கினார்.
இந்நிலையில், சமீபத்தில் இவரின் சிஷ்யர் ஒருவர் விபத்தில் பலியாக, அவருக்கு அகோரி மணிகண்டன் திருச்சியிலேயே இறுதி சடங்குகளை நடத்தினார். மேலும், இறந்து போன சிஷ்யரின் உடலின் மீது ஏறி அகோரி விசித்திர பூஜை செய்து, நள்ளிரவில் பேய் ஓட்டுவது, சிறப்பு பூஜை செய்வது என சங்குகள் முழங்க மிகுந்த சத்தத்துடன் பூஜை நடத்தி வருகிறார்கள்.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.
மேலும், மணிகண்டன் நடத்திய இந்த ஆன்ம சாந்தி பூஜை இணையம் முழுக்க வைரலாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அகோரி சாமியார் மணிகண்டன் கடந்த நாளில் தனது சிஷ்யயை திருமணம் செய்து கொண்டார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் சிஷ்யையாக பயிற்சி எடுத்து வந்தார்.
மேலும், கடந்த சில காலமாக பிரியங்கா, மணிகண்டனுடன் சேர்ந்து பயிற்சி எடுத்து வந்தார். இதில் பிரியங்கா மீது காதல் வயப்பட்ட அகோரி சாமியார் மணிகண்டன் கோவிலில் வைத்து பிரியங்காவை திருமணம் செய்து கொண்டுள்ளார்,.
இந்து முறைப்படி மந்திரம் ஓத திருமணம் செய்து கொண்டார். இவரின் அருகில் இருந்த மற்ற அகோரிகள் சங்குகள் ஊதி திருமணத்தை நடத்தி வைத்தனர்.
உடல் முழுக்க விபூதி பூசி அகோரி மணிகண்டன் அரை நிர்வாணத்தில் காட்சி அளித்தார். பிரியங்காவும் முகம் முழுக்க விபூதி பூசி இருந்தார். இந்த திருமணம் தற்போது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.