நடிகர் பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் இத்தனை வயது வித்தியாசமா? வாயடைத்துப்போன ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் பிரேம்ஜி அமரன், ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார்.
நடிகர் பிரேம்ஜி
தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜாவின் சகோதரும், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் என இரு மகன்கள் உள்ளனர்.
சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, கோவா, மாஸ் என்கிற மாசிலாமணி, மாநாடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார் பிரேம்ஜி. தனித்துவமான நடிப்பு, நகைச்சுவை, அவருக்கே உரித்தான பாணியில் பேசும் வசனங்கள் என இவரின் நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
45 வயதான பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். அவர் எங்கு சென்றாலும் எப்போது கல்யாணம் என்ற கேள்வி தான் ரசிகர்களிடத்தில் இருந்து எழும்.
இந்நிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு சமீபத்தில் திருத்தணியில் அவர் திருமணம் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு மத்தியில் எளிமையாக நடைபெற்றது.
இதன் பின்னர் பிரேம்ஜியின் ரசிகர்கள் மற்றும் இணையதளவாசிகள் பலரும் பிரெம்ஜியின் மனைவி இந்து யார், இருவருக்கும் எப்படி பழக்கம். பிரேம்ஜிக்கு 45 வயதாகிறது அவரது மனைவிக்கும் அவருக்கும் எத்தனை வயது வித்தியாசம் போன்ற விடயங்கள் குறித்து ஆர்வமாக தேடிவருகின்றனர்.
ரேம்ஜி மனைவி இந்து
இந்நிலையில், நடிகர்பிரேம்ஜி மனைவி இந்து குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி, இந்து சேலத்தை சேர்ந்தவர், சேலத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தற்போது பணிபுரிகின்றார்.
பிரேம்ஜி, இந்து இருவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது, இருவீட்டாரின் சம்மதத்திற்காக காத்திருந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பிரேம்ஜியை விட அவரது மனைவி இந்து 20 வயது இளையவர் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |