எமனாகும் சர்க்கரை வியாதி குணமாக இது ஒன்று குடித்தால் போதும்.. நீங்க இருக்கும் திசைக்கு கூட திரும்பாது!
அகத்திக்கீரையில் மிக அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.
இது நல்ல கசப்புத் தன்மையுடைய கீரை என்பதால் நாம் நிறைய பேர் இதை சாப்பிடுவதில்லை.
ஆனால் அதிக அளவு உயிர்ச் சத்துக்கள் நிறைந்த கீரை இது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையால் நீரிழிவு பிரச்சினை உண்டாகிறது. இது திடீரென வரும் பிரச்சினை கிடையாது.
பொதுவாக நீரழிவு பிரச்சினை உள்ளவர்கள் கசப்புத் தன்மை கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்பது நமக்குத் தெரியும்.
அவற்றில் அகத்திகீரையும் ஒன்று. இதனை கொண்டு சூப் செய்து குடித்தால் உடல் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.
அகத்திக்கீரை சூப் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- அகத்திக் கீரை - 1 கப்
- பாசிப்பருப்பு - 4 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 4 பல்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- உப்பு - தேயைான அளவு
- மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
செய்முறை
முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவிக் குழைவாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சிறிது சீரகம் சேர்த்து அதனுடன் நன்கு தட்டி வைத்த வெங்காயம், பூண்டு ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்குங்கள்.
பின்பு அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்கு கொதித்ததும் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை அதில் சேர்க்க வேண்டும்.
கீரை நன்கு குழைந்து வெந்ததும் அதில் உப்பு சேருங்கள். இப்போது இதிலிருந்து கீரையை வடித்து அந்த சாறை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை மீண்டும் வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, அதில் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பைச் சேர்த்து கலந்து மிளகுத் தூள் சேருங்கள். நெய்யுடன் சீரகம் சேர்த்து தாளித்தால் அகத்திக்கீரை சூப் ரெடி.