பிக் பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய போட்டியாளர் இவரா? ரசிகர்கள் ஷாக்... கமல் யாரை காப்பாற்றினார் தெரியுமா?
வழக்கம் போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் முதல் நபராக ராஜு சேவ் ஆகியுள்ளார்.
இந்த சீசனில் இருப்பவர்களில் அதிக ஓட்டுக்கள் ராஜுவுக்குத் தான் வருகிறது.
இதேவேளை, எதிர்பாராத ஒரு போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடித்து பிரபலமான சஞ்சீவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்ததில் இருந்தே நடிகர் விஜய்யை துணைக்கு அழைத்துக் கொண்டே புரமோஷன் தேடினார்.
ஆனால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதே சஞ்சீவ் தான் எனும் திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என சில தினங்களுக்கு முன்பாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்த வாரம் ஒருவரை மட்டுமே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.