சர்வைவரில் பங்கேற்ற ஸ்ருஷ்டியின் பரிதாப நிலை! எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிட்டாரே? ரசிகர்கள் ஷாக்
சர்வைவரில் பங்கேற்றதால் முகத்தில் tan அதிகம் வந்திருப்பதை காட்ட ஸ்ருஷ்டி புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
முதல் ஆளாக சர்வைரில் இருந்து எலிமினேட் ஆனவர் ஸ்ருஷ்டி, அவர் எலிமினேட் ஆகி மூன்றாம் உலகம் தீவில் இருந்த நிலையில் காயத்ரி ரெட்டியுடன் நடந்த போட்டியில் தோல்வி அடைந்து அவர் நிரந்தரமாக சர்வைவரில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.
அங்கிருந்து வீட்டிற்கு திரும்பிய ஸ்ருஷ்டி சர்வைவர் பயணம் பற்றி மிக எமோஷ்னலாக பதிவிட்டிருந்தார்.
After n before of #survivortamil effect ? @ZeeTamil @ZEE5Tamil pic.twitter.com/w4UpLcjM9v
— S r u s h t i i D a n g e (@srushtiDange) September 25, 2021
நீங்கள் டிவியில் பார்ப்பது ஒரு சிறிய அளவு தான், ஆனால் அங்கு வாழ்வது மிகவும் கடினமாக இருக்கிறது என கூறியிருந்தார்.
மேலும் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது குடும்பத்தினர் உடன் கேக் வெட்டி, அவரை வரவேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்களில் ஸ்ருஷ்டி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அவர் தற்போது சர்வைவர் சென்று வந்த பிறகு தன்னுடைய உடலில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.
செல்லும் முன்பு எடுத்த புகைப்படம் மற்றும் தற்போது திரும்பி வந்த பிறகு முகத்தின் நிறமே மாறி tan அதிகம் இருப்பதை குறிப்பிடும் வகையில் போட்டோ வெளியிட்டு இருக்கிறார் அவர்.
"After n before of #survivortamil effect" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.