எச்சரிக்கை... ஆப்பிள் சாப்பிட்ட பின்பு இந்த உணவை சாப்பிடாதீங்க!
ஆப்பிள் சாப்பிட்ட பின்பு சாப்பிடக்கூடாத சில பொருட்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள்
மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை அளிக்கும் ஆப்பிளில், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் சி, பி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன.
அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.
ஆனால் ஆப்பிள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால், இதனை காலையில் உண்ணக்கூடாது என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகின்றது.
மேலும் ஆப்பிள் சாப்பிட்ட பின்பு சில உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
ஆப்பிள் சாப்பிட்ட பின்பு சாப்பிடக்கூடாது உணவுகள்
ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவும். ஏனெனில் வயிற்றினுள் pH அளவு பாதிக்குமாம். இதனால் செரிமான கோளாறு, குடல் வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
ஆப்பிள் சாப்பிட்ட உடன் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் முள்ளங்கியும் குளிர்ச்சி என்பதால், ஒரே நேரத்தில் இவற்றினை உண்ணும் போது சளி அதிகமாவதுடன், சிலருக்கு செரிமான கோளி மற்றும் தோல் வெடிப்புகளும் ஏற்படும்.
முள்ளங்கி மாதிரியே தயிரிலும் குளிர்ச்சித் தன்மை தான் இருக்கிறது. இதனை ஒரே நேரத்தில் உண்பதால் உடலில் சளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் செரிமான கோளாறு ஏற்படுகிறது.
ஆப்பிள் சாப்பிட்ட பின்பு நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் உண்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை வயிற்றில் இருக்கும் சிட்ரிக் அமிலத்தை அதிகரித்து வயிறு மற்றும் மார்பில் எரியும் உணர்வை உண்டாக்கும்.
இதே போன்று ஊறுகாயையும் ஆப்பிளுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். இது வயிற்றினுள் அமில, கார சமநிலையை பாதிப்பதுடன், வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |