என்னவோ போ.. மனக்குமுறலை போஸ்ட்டில் கொட்டிய ஆர்த்தி ரவி- வைரலாகும் பதிவு
விவாகரத்து சர்ச்சைக்கு பின் ஆர்த்தி போடும் பதிவுகள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்று வருவது வழக்கம். அப்படியொரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
விவாகரத்து
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானாவர் தான் நடிகர் ரவி மோகன்.
இந்த திரைப்பட வெற்றிக்கு பின்னர், ரவி தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என மாற்றிக் கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்.
கடந்த வருடம் அவருடைய குடும்ப பிரச்சினைகள் ஊடகங்களுக்கு வர ஆரம்பித்தது.
அதாவது காதலித்து திருமணம் செய்த ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாகவும், குடும்பத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடப்பதாகவும் அறிக்கையொன்றை பகிர்ந்தார். அன்று முதல் இன்று வரை சமூக வலைத்தளங்களில் ரவிமோகன் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
தாய், தந்தையாக இருவரும் சேர்ந்து செய்த விஷயம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவிமோகன் - ஆர்த்தி இருவரும் விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் மகன்களுக்காக போட்ட பதிவு இணையவாசிகள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதாவது, ரவிமோகனின் மூத்த மகன் ஆரவ் நேற்றை தினம் அவருடைய பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். இந்த தினத்தை கொண்டாடும் வகையில், பெற்றோர்களான ரவி- ஆர்த்தி இருவரும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து மகனுக்கு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் கொடுத்திருந்தனர்.
ஆர்த்தி போட்ட பதிவு
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி ரவி தனது மகன்கள், தயார் மற்றும் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்துள்ளார்.
"எங்க இருக்கோம், எங்கயோ இருக்கோம் ஆர்த்தி அக்கா" என பதிவிட்டிருந்தார். இந்த பதிவை தனது ஸ்டோரியில் பகிர்ந்த ஆர்த்தி " என்னவோ... போ" என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், இரண்டு மகன்களையும் தனியாக வளர்ப்பது சவாலான விடயம் என்றாலும் கைவிட்ட கணவரை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |