நாக பாம்பு கடிச்சா உடனே இதை பண்ணிடுங்க: இல்லையெனில் 3 நிமிடத்தில் இறந்து விடுவீர்கள்
நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன் போன்ற பாம்புகள் மிகவும் விஷமுள்ளவை. இவை கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
விஷ பாம்பு கடிக்கு என்ன செய்வது?
பொதுவாக கிராமப்புறங்களில் வாழும் மக்கள் இந்த பாம்பு கடியால் பெரும் அவதிக்குள்ளாகி அதற்கு என்ன செய்வது என தெரியாமல் உயிரையும் இழக்கிறார்கள்.
சிலர் சித்த மருந்து நாட்டு மருந்து போன்ற மூலிகைகளால் பிழைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான பாம்பு கடி இறப்புகள் பதிவாகின்றன.
ஆனால் இதை சரியான நேர மருத்துவத்தின் மூலம் சரி செய்ய முடியும். ஒரு பாம்பு நம்மை கடிக்கும் போது "பாம்பின் வகை மற்றும் அதன் விஷத்தின் தன்மைக்கு ஏற்ப விளைவுகள் கணிசமாக வேறுபடுகின்றன.
நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன் போன்ற பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இது தசை பலவீனத்துடன் தொடங்கி, பின்னர் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.
இந்த பாம்புகள் கடித்த சில நேரங்களில் சுவாசிப்பதில் சிரமம், கைகால்களில் பலவீனம், தடுமாறிய நடை மற்றும் இரட்டை அல்லது மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் வரும்.
இந்த விஷத்தின் மூலம் பாதிக்கப்ட்டவர்களுக்கு கண்கள் கூட திறந்து வைக்க முடியாதாம். சில சந்தர்ப்பங்களில், இது மரணத்தை ஏற்படுத்தும் இரத்தப்போக்கு அல்லது பல உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
செய்ய வேண்டியது
பாம்பு கடி வாங்கிய நபரை அமைதியாகவும் அசைவற்ற நிலையிலும் வைத்திருக்க வேண்டும். கடித்த பகுதியை ஒரு ஸ்லிங் அல்லது ஸ்பிளிண்ட் பயன்படுத்தி அசைக்காமல் வைத்து, இதய மட்டத்திற்கு கீழே வைத்திருக்க வேண்டும்.
கடித்த இடத்திற்கு அருகில் உள்ள இறுக்கமான ஆடைகள் அல்லது நகைகளை அகற்ற வேண்டும். பாம்பு கடிக்கப்பட்ட நபர் எழும்பி நடக்க கூடாது. இது அசைவு விஷம் பரவுவதை விரைவுபடுத்தும்.
மேரும் முக்கியமாக செய்யவே கூடாத சில விஷயங்கள் உள்ளன. அதாவது கடித்த காயத்தை வெட்டுதல் அல்லது உறிஞ்சுதல் ஐஸ் அல்லது டோர்னிக்கெட் பயன்படுத்துதல் மது அல்லது காஃபின் கொடுப்பது பாம்பைப் பிடிக்க அல்லது கொல்ல முயற்சித்தல் இவற்றை செய்வது முட்டாள் தனம்.
செய்ய வேண்டிய விடயங்களை செய்து முடித்ததும் உடனடியாக நபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இவற்றை பின்பற்றாவிட்டால் மரணம் நிச்சயம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |