சந்திர கிரகண முடிவில் 12 ஆண்டுகளின் பின் குருவின் ராஜ யோகம் - எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?
நவக்கிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகம் என்றால் அது குரு பகவான் தான். அவர் எந்த மாற்றத்தை கொடுத்தாலும் அது நன்மைக்கே வந்து சேரும்.
அந்த வகையில் சந்திரன் குரு பகவானுடன் ஒன்றிணைந்து உருவாக்கும் யோகம் தான் கஜகேசரி ராஜயோகம். இந்த ராஜயோகமானது செப்டம்பர் 14 ஆம் தேதி உருவாகவுள்ளது.
ஆனால் பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு பித்ரு பட்சம்/மகாளய பட்சம் செப்டம்பர் 07 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த பித்ரு பட்சம் காலத்தில் கஜகேசரி ராஜயோகம் உருவாவது சற்று சிறப்பானது. அதுவும் இப்படியான நிகழ்வு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் ஏற்படுகிறது.இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் பற்றி பார்க்கலாம்.
துலாம் | துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. உங்களுக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும். உங்களுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றி பெறுவார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்கள் செயல் திறனுக்கு ஏற்ப நல்ல மரியாதை கிடைக்கும். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்பது அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். |
மிதுனம் | மிதுன ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. உங்கள் ராசிக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எந்த வேலையை எடுத்தாலும் அதை வெற்றியைாக முடிப்பீர்கள். |
கன்னி | கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. கன்னி ராசிகாரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றிகிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் eல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே காதல் அதிகரிக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).