பெண் வேடத்தில் திருமணம் செய்த ஆண்.. 12 நாட்களில் தெரியவந்த சீக்ரெட்- அதிர்ச்சியில் குடும்பத்தினர்
ஆணொருவர் பெண் போல் வேடமிட்டு திருமணம் செய்த சம்பவம் இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காதல் திருமணம்
ஆதிண்டா கன்சா - ஏ.கே ஆகிய இருவரும் சமூக வலைத்தளங்களில் பேச ஆரம்பித்துள்ளனர்.
காலங்கள் சென்றதும் ஆதிண்டா கன்சா - ஏ.கே இருவரும் நேரில் பார்ப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அப்போது ஆதிண்டா கன்சா முகத்தை முழுவதையும் மறைத்து முஸ்லீம்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்துள்ளார்.
இவ்வாறு ஆதிண்டா கன்சா ஹிஜாப் அணிவதை ஏ.கே சந்தேசமாக பார்க்கவில்லை. இந்த உறவு தொடர, இறுதியில் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
பொய்களின் வெளிச்சம்
இந்த நிலையில் ஆதிண்டா திருமணத்திற்கு பின்னர் மாதவிடாய மற்றும் பல்வேறுப்பட்ட காரணங்களை கூறி குடும்பமாக இருப்பதை தவிர்த்துள்ளார்.
திருமணமாகி 12 நாட்கள் கடந்தும் இந்த நிலை தொடர்ந்துள்ளது. இதனால் சந்தேகம் கொண்ட ஏ.கே ஆதிண்டா குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளார்.
அதில் ஆதிண்டாவின் பெற்றோர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் மகள் செய்து கொண்ட திருமணம் குறித்து ஏதுவும் தெரியவில்லை.
மாறாக ஆதிண்டா ஒரு பெண் இல்லை அவர் ஒரு ஆண்மகன் என்றும் தெரியவந்துள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்கள்
இதனை தொடர்ந்து ஏ.கே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணை செய்து பார்த்த போது பலரும் வியந்து போகும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன.
அதாவது ஆதிண்டா ஒரு ஆண். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து பெண் போல் ஆடை அணிந்து அவர்கள் போல் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். உரத்து பேசும் போது இவருடைய குரல் பெண் போல் இருந்துள்ளமையினால் இவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
ஏ.கே - ஆதிண்டா திருமண புகைப்படங்களில் கூட ஆதிண்டா ஒரு ஆண் என்பது தெரியாமல் அச்சு அசல் பெண் போலவே நடித்துள்ளார். அத்துடன் ஏ.கேவின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு தான் இவர் இப்படியொரு நாடகம் போட்டுள்ளார் என்பதும் தெரிவாகிறது.
விசாரணை முடிவில் பொலிஸார் ஏமாற்றிய குற்றத்திற்காக ஆதிண்டாவை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்தோனேஷிய சட்டப்படி ஆதிண்டாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |