தாலிபான்களின் அட்டகாசம்: கொலை செய்து தொங்கவிடப்பட்ட 3 ஆண்கள்! வெளிநாடுகளுக்கு செல்ல குவியும் மக்கள்
ஆப்கனிஸ்தான் காபூலைக் கைப்பற்றிய தாலிபான்களிடமிருந்து தப்பிக்க மக்கள் பயங்கர கஷ்டத்தினை அனுபவித்து வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் ஹீரத் பகுதியில் பொதுமக்களின் பார்வைக்கு 3 ஆண்களின் சடலத்தினை கிரேன் ஒன்றில் தாலிபான்கள் தொங்கவிட்டு மக்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தினர்.
இந்த மூன்று ஆண்களும் கொல்லப்பட்டதற்கு காரணம் என்னவென்றால், கொள்ளையடிக்க முயற்ற போது தாலிபான்களிடம் சிக்கியுள்ளனர். இதனால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கன் தலைநகர் காபூலில் சிறிய அளவில் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள், சமீபத்தில், பொது வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர், கைவிலங்கு பூட்டி, முகத்தில் கரி பூசி, வாயில் கெட்டுப்போன பழைய ரொட்டி துண்டை திணித்து அவர்கள் இழுத்துச் செல்லப்பட்ட செய்தி கடந்த வாரம் வெளியாகியிருந்தது.
சிறு சிறு குற்றங்களுக்கு கூட பாரிய தண்டனை வழங்கப்பட்டு வருவதால், மக்கள் மற்ற நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று வருகின்றனர். இந்நிலையில் காபூலின் பாஸ்போட் அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிய பாஸ்போட்டிற்கு பதிவு செய்வதற்கு காத்திருக்கின்றனர்.
மற்ற நாடுகளுக்கு மக்கள் தப்பிச் செல்லக்கூடாது என்று தாலிபான்கள் எச்சரித்து வரும் நிலையில், மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வந்தாலும், உறவினர்களின் மருத்து சிகிச்சைக்கு செல்வதாக பலரும் பாஸ்போட் அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.