நடுவானில் பிரசவ வலியில் துடிதுடித்த ஆப்கான் பெண்! அவரது குழந்தைக்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா?
அமெரிக்க விமானத்தில் பிறந்த தன்னுடைய குழந்தைக்கு ரீச் என பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர் ஆப்கான் பெற்றோர்கள்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர், வெளிநாட்டவர்கள் தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர், ஆப்கான் மக்களும் தங்களது நாட்டை விட்டு அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்களை மீட்பதற்காக அமெரிக்க விமானப்படை விமானம், ஆகஸ்டு 21ம் தேதி அங்கிருந்து புறப்பட்டது. நடுவானில் 28 ஆயிரம் அடிக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

ஜெர்மனியில் உள்ள ராம் ஸ்டைன் விமானப்படை தளத்துக்கு விமானம் சென்றடைந்த போது, பெண் குழந்தையை அவர் பெற்றார்.
தரையிறங்கிய பின்னர், குழந்தை மற்றும் தாயை மருத்துவர்கள் பரிசோதித்துடன், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த குழந்தைக்கு 'ரீச்' என்று பெற்றோர்கள் பெயரிட்டுள்ளனர். அவர்களை அழைத்துக் கொண்டு சென்ற அமெரிக்க விமானத்தின் அழைப்பு சமிக்ஞை (call sign) 'ரீச் 828'என்பதாகும்.
அதனால், ரீச் என்ற பெயரை அந்தக் குழந்தைக்கு வைத்து தங்களது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.
