எங்களை கொன்றாலும் பரவாயில்லை.. தாலிபான்களை எதிர்த்து ஆப்கன் ஆசிரியர்கள் செய்த காரியம்! காபூலில் பரபரப்பு
ஆப்கன் ஆசிரியர்கள் பெண் கல்விக்காக குரல் கொடுத்து தாலிபான்களை எதிர்த்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அங்கு பெண்களின் உரிமை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக பெண்களை தலிபான்கள் கல்வி பயில அனுமதிப்பார்களா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
ஆப்கனில் இருபாலினரும் ஒன்றாக சேர்ந்து கல்வி கற்க கூடாது என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இத்தகையச் சூழலில் தாலிபான்கள் தங்களை கொன்றாலும் பரவாயில்லை, தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுப்போம் என ஆப்கன் நாட்டை சார்ந்த ஆசிரியர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். என்ன நடந்தாலும் தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தன்னார்வ அமைப்பை சார்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள், பெண் கல்வி தொடர்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பெண்கள் கல்வி கற்கலாம் மற்றும் பணிக்கு திரும்பலாம் என்று தாலிபான்கள் கூறி இருந்தாலும் அவர்கள் எப்படி மாறுவார்கள் என்பது தெரியாது.
இருப்பினும் எது நடந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் சக்தி எங்களுக்கு உள்ளது என்று ஆப்கன் ஆசிரியர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.