காது மூக்கு தொண்டையில் பரவும் கொரோனா வைரஸ் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில், ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள்.
தற்போது கொரானா வைரஸ் 2-வது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் விளக்கமளித்துள்ளனர். அதில், மூக்கு ஒழுகுதல் 4.1.சதவீதம், மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை போன்றவை மூக்கில் கொரானா வைரஸ் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகளாக உள்ளது.
மேலும், வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலும் மீண்ட பிறகு ஒருவருக்கு வாசனையில் ஏற்படும் பாதிப்பு 40 சதவீதம பூரணமாக குணமடைவதை காணமுடிகிறது. தொண்டையில் புண் 11.3 சதவீதம் எரிச்சல், அடைப்பு, தொண்டை சதை வீக்கம் டான்சில்ஸ் போன்றவை பரவலாகப் ஏற்படுகிறது.
மேலும் தலைவலி, தலைபாரம், உடல் வறட்சி, சோர்வு, ஆகியவையும் ஏற்படுகிறது.
இது தவிர நாக்கில் சுவை உணர்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வாசனை மற்றும் சுவையில் 40 சதவீதம் மாற்றம் உள்ளதாக அறிக்கை உள்ளது.