விளம்பரத்திற்காக Lamborghini Urus மாடல் காரை சுக்குநூறாக நொறுக்கிய யூடியூபர்!
Lit Energy ஊட்டச்சத்து பானத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பல கோடி ரூபாய் பெறுமதியான காரை உடைத்த காட்சி இணையவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரை சேதப்படுத்திய யூடியுப்பர்
மிகேல் லிட்வின் எனும் யூடியுப்பர் ஒருவர் Lit Energy ஊட்டச்சத்து பானத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அப்போது மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான Lamborghini Urus மாடல் காரை உடைத்துள்ளார்.
இதன்படி, மிகேல் லிட்வின் கிரேன் மூலம் ஊட்டச்சத்து பானம் நிரப்பப்பட்ட மிகப்பெரிய கேனை மேலே தூக்கி, பின்னர் கார் மீது குறித்து கேனை விழச் செய்ய வேண்டும் என்பது தான் திட்டம்.
இதன்போது அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் என நினைத்துள்ளார்.
அப்போது இவரின் திட்டத்தினால் குறித்து கார் விபத்திற்குள்ளாகி உடைந்துள்ளது. இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ விளம்பரப்படுத்துவதற்கு 3 கோடி காரா கிடைத்தது” என கலாய்த்துள்ளார்கள்.