பாகனுடன் போட்டி போட்டுக் கொண்டு கியூட்டாக செல்போன் பார்க்கும் யானை!
கோவில் யானை ஒன்று பாகனுடன் போட்டி போட்டுக் கொண்டு செல்போன் பார்க்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற கும்பேசுவரர் கோவிலில் யானையின் வீடியோ தான் தற்போது அனைவரையும் கவர்ந்து வருகின்றது.
இந்த மங்களம் யானை கடந்த 40 வருடங்களாக கோவில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அசோக்குமார் என்ற பாகனால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகன் அசோக் குமாருடன் போட்டிபோட்டுக்கொண்டு யானை அவரின் செல்போன் பார்க்கிறது.
இந்த கியூட்டான சம்பவத்தை கோவிலுக்கு வந்திருந்த பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ ட்ரெண்டாகி வரும் நிலையில் கோவிலுக்கு பலர் தற்போது யானையை பார்க்கவே படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.