அக்காவின் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கும் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ள புகைப்படங்களை அதிதி ஷங்கர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கும் தாமோதரம் என்பவருக்கும் கடந்த 2021 ம் ஆண்டு ஜீன் மாதம் திருமணம் நடந்தது. கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது.
பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர்.
அந்த வகையில் இப்போது அதிதியின் அக்காவான ஐஸ்வர்யாவிற்கும் கார்திகேயன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
கார்த்திகேயன் திரைத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றுபவர் என்று சொல்லப்படுகிறது. நிச்சயதார்த்த புகைப்படங்களை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் வைரலாகி வரகின்றது.