அழகு ஓவியமாக ஜொலிக்கும் அதிதி ஷங்கர்... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்!
நடிகை அதிதி ஷங்கர் ரெட் கலர் மாடர்ன் உடையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைரலாகி வருகின்றது.
நடிகை அதிதி
ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், தற்போது அதர்வாவின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கி வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக எம். ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமன்றி பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட அதிதி, தமிழில் யுவன் இசையில் வெளிவந்த மதுர வீரன் என்கிற பாடலை பாடியுள்ளார்.
இந்த நிலையில், நடிகை அதிதி ஷங்கர் ரெட் கலர் மாடர்ன் உடையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கியூட்டான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |