தாய் மாமாவாக மாறிய 96 நடிகர் செய்த முதல் வேலை- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
'96' படத்தில் இளம் வயது ராம் ஆக நடித்து கெளரி ஷங்கரை ரொமான்ஸ் செய்த ஆதித்யா பாஸ்கரின் பதிவு ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
எம்.எஸ். பாஸ்கர்
Neeya Naana: இவரது பேச்சை நம்பி பச்சத்தண்ணீர் கூட குடிக்காதம்மா! பெண்ணிற்கு கோபிநாத் கொடுத்த அட்வைஸ்
டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சீரியல் நடிகர், சினிமாவில் காமெடி நடிகனாக வலம் வருபவர் தான் நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.
இவர், கடந்த காலங்களில் குணசித்திர கதாபாத்திரத்திலும் வில்லத்தனத்திலும் தனது நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
லப்பர் பந்து படத்துக்கு முன்னதாக ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றியை தந்த பார்க்கிங் படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. அவரது மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஆதித்யா பாஸ்கர் என்ற மகனும் இருக்கிறார்.
இவர், துணை நடிகராகவும் வெப்சீரிஸில் நாயகராகவும் நடித்திருக்கிறார். நடிப்பு ரத்தத்திலேயே ஊறி கிடக்கும் நிலையில், பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து சூப்பர் ஹிட்டான 96 படத்தில் இளம் வயது ராம் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் ஆதித்யா பாஸ்கர்.
இதனை தொடர்ந்து, வெந்து தணிந்தது காடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஹாட் ஸ்பாட் மற்றும் ரெபல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மீம் பாய்ஸ், பாவக் கதைகள் என ஓடிடியிலும் ஒரு ரவுண்டு வருகிறார்.
மருமகளுக்காக செய்த விடயம்
இந்த நிலையில், ஐஸ்வர்யா பாஸ்கருக்கு திருமணமாகி அழகான பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு வீட்டார் அனைவரும் ஒன்றுக் கூடி “அகீரா” என பெயர் வைத்துள்ளனர்.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது மருமகளின் பெயரை தனது மார்புக்கு கீழே பச்சைக் குத்திக் கொண்ட ஆதித்யா பாஸ்கர் அந்த டாட்டூவை காட்டியபடியும் மருமகளை கையில் ஏந்திக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், “என்னோட மருமகள் இதை படித்துப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்த பின்னர் என்ன ரியாக்ட் பண்ணுவான்னு பார்க்க ரொம்பவே ஆர்வமாக உள்ளேன்..” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகவுள்ளது. ரசிகர்களும் குடும்பத்தினருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |