Bigg Boss: 8 லட்சத்திற்கு ஆசைப்பட்ட ஜாக்குலின்... இறுதியில் கண்ணீருடன் வெளியேறிய சோகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 8 லட்சத்திற்கு ஆசைப்பட்ட ஜாக்குலின் இறுதியில் கண்ணீருடன் வெளியேறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் 2 தினங்களில் முடிவடையும் நிலையில், கடைசியாக 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
பணப்பெட்டி டாஸ்கில் முத்து, ரயான், விஷால், பவித்ரா என நான்கு பேர் இந்த டாஸ்கில் கலந்து கொண்டுள்ளனர். அடுத்ததாக ஜாக்குலின் 8 லட்சம் ரூபாயை எடுப்பதற்கு வெளியே சென்றுள்ளார்.
குறித்த பணத்தை எடுத்துவிட்டு வீட்டிற்குள் வந்துவிட்டாலும், 2 நொடிகள் தாமதாக வந்துவிட்டதாகக் கூறி பிக் பாஸ் ஜாக்குலினை வெளியேற்றியுள்ளார்.
பணப்பெட்டியை எடுக்க செல்லும் முன்பு, பயத்தில் ஜாக்குலின் அழுத நிலையில், பிக் பாஸ் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆனாலும் ஜாக்குலின் பயந்தது போன்று தற்போது நடந்தேறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |