சுவையான சூடான அதிரசம் செய்வது எப்படி? ஒரே ஒரு முறை இப்படி செய்து ருசியுங்கள்..!
வீட்டில் எளிய வழியில் அதிரசம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 400 கிராம்
- ஏலக்காய் – 5 எண்ணம்
- சுக்கு – சுண்டு விரல் அளவு
- மண்டை வெல்லம் – 300 கிராம்
- எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு
அதிரசம் செய்முறை
அரிசியை 1 – 1½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து விடவும்.
பின் அரிசியை உலர்ந்த துணியில், நிழலில் காய வைக்கவும். முக்கால் பாகம் காய்ந்தவுடன் மிசினில் இடித்துக் கொள்ளவும். இடித்த மாவை சலித்துக் கொள்ளவும்.
வெல்லத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின் ஏலக்காய், சுக்கு கலவையை இடித்த மாவுடன் சேர்க்கவும்.
துண்டுகளாக்கிய வெல்லத்தை அடிகனமான பாத்திரத்தில் 25 கிராம் (1/8 டம்ளர்) தண்ணீர் விட்டு காய்ச்சவும்.
பின் வெல்லப் பாகை வடிகட்டி சிறிது சிறிதாக அரிசிமாவில் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறவும். அதிரச மாவானது சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை (பொரித்து எடுப்பதற்கு ஏற்ப) காய வைத்து அதிரச மாவை வடை மாதிரி தட்டி எண்ணெயில் போடவும். ஒருபுறம் வெந்ததும் அதிரசத்தை மறுபுறம் திருப்பி விடவும்.
அதிரசமானது நிறம் மாறியவுடன் எடுத்து விடவும்.
சுவையான அதிரசம் தயார்.