திருமணத்திற்கு மிக முக்கியமாக அந்த விஷயத்தை கடைப்பிடிப்பது ஏன்?
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவார்கள். அப்படி திருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுதான், அந்த உறவை ஆயுள் முழுவதும் நீட்டிக்கச் செய்கிறது. மேலும், இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கையில் எத்தனை கவலைகள், சண்டைகள், நெருக்கடிகள் வந்தாலும் அவற்றிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது.
எனில் அதற்கு இருவரின் இணைப்புத்தான் முக்கிய காரணம். அவர்களின் மன அழுத்ததைக் குறைக்க இந்த தாம்பத்தியம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பல தகாத உறவுகளுக்கு தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இல்லாததும் காரணமாக இருக்கின்றன.
எனவே திருமண வாழ்க்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை உடைக்காமல் பார்த்துக்கொள்வதும் இந்த தாம்பத்திய வாழ்க்கைதான்.
இதனால், இருவருக்குள் இந்த உறவு உண்மையாக இருப்பின் அவர்களுக்கு மற்றொருவர் மீது ஈர்ப்பு உண்டாகாது. எனவேதான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க தாம்பத்தியமும் அவசியம் என கூறுகிறார்கள்.