addiction symptoms: போதைப்பொருளுக்கு அடிமையாகுதல் என்றால் என்ன? எப்படி விடுபடுவது?
போதைப்பொருள்களுக்கு அடிமையாவது என்பது ஒருவரை உடல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாரிய பாதக விளைவுகளை சந்திகக்க நிர்பந்திக்கின்றது.
பொதுவாக அடிமையாதல் என்றால் ஒருவர் தனக்கு இன்பம் தரும் ஒரு பொருளைச் (மது, சிகரெட்கள், போதைமருந்துகள் போன்றவை) சார்ந்து வாழத்தொடங்கும் நிலையாகும்.
அதாவது அதனை தவிர்த்து அவர்களால் இயல்பு நிலையில் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதே அடிமையாதல் addiction என வரையறுக்கப்படுகின்றது.
ஒருவர் ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிறார் என்றால், உண்மையில் அதனை அவர் விரும்பி செய்கின்றார் என்று மட்டும் அர்த்தம் கிடையாது. அது வலுவான உயிரியல் அடிப்படையைக்கொண்ட ஒரு மூளை நோயாகவே மருத்துவ ரீதியில் பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு போதைபழக்கத்துக்கு அடிமையாவது சமூக மற்றும் உளவியல் காரணிகளால் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
எப்படி அடிமையாகின்றார்கள்?
சமூகத்தை பொருத்தமட்டில் போதைபழக்கத்துக்கு அடிமையானவர்கள் பற்றிய பல்வேறு தவறான பரிதல்கள் காணப்படுகின்றது.
உதாரணமாக, அவர்கள் மனத்தளவில் பலவீனமானவர்கள், ஒழுக்கமற்றவர்கள் மற்றும் குடும்பத்தின் மீது அக்கறையற்றவர், பொறுப்பற்றவர்கள் போன்ற கருத்துக்கள் அவற்றுள் மிகவும் பொதுவானவை.
ஆனால் பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், ஒருவர் மது அல்லது வேறு ஏதேனும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிறார் என்றால், அவரே விரும்பி அப்படி நடந்துகொள்வதில்லை, அதற்குப் பல மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் காரணமாக இருக்கின்றன.
குறிப்பாக மனிதர்களை அடிமைப்படுத்தக்கூடிய மது, நிக்கோடின் அடிப்படையிலான சிகரெட்கள், வேறு போதைமருந்துகள் ஆகிய எல்லாவற்றிலும் காணப்படும் குறிப்பிட்ட சில வேதிப்பொருள்கள், அவற்றைப் பயன்படுத்துவோரின் உடலில் உயிரியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.இதனை ஒரு முறை பயன்படுத்திய பின்னர் மீண்டும் அதனை பயன்படுத்த தூண்டுகின்றது.
இவ்வாறான பொருட்களில் எதை பயன்படுத்தினாலும் அவருடைய மூளையில் டோபமைன் என்ற மகிழ்ச்சி உணர்வை கொடுக்க கூடிய ஹோர்மோன் சுரக்கின்றது.இது மகிழ்ச்சியுணர்வைத் தூண்டுகிறது.
இதனால், அவர் அந்தப் பொருளை பயன்படுத்திய பின்னர் ஒருவர் மகிழ்சிக்காக மீண்டும் அந்த பொருளை நாட வேண்டி நிர்பந்திக்கப்படுகின்றான்.
அதைப் பயன்படுத்தினால் தனக்கு உடனே மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுவதன் விளைவாகவே இந்த பொருளை சார்ந்து வாழ ஆரம்பிக்கின்றான்.
மகிழ்ச்சிக்கான ஏங்கும் போதெல்லாம் அந்த பொருளை நுகர ஆரம்பித்து விடுவதால் காலப்போக்கில் அது இல்லாத வாழ்க்கை மகிழ்சியற்றதாக மாறிவிடுகின்றது.உண்மையில் இது மூளை சம்பந்தப்பட்ட ஒரு நோய் என்றே கூற வேண்டும்.
போதைப் பொருட்களால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்
அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்ற உடல் நலப்பிரச்சினைகளில் ஆரம்பித்து மரணம் வரையில் கூட பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துபவர்களுக்குக் கல்லீரல் பாதிப்பும் அல்லது கல்லீரல் புற்றுநோய் ஆகியன ஏற்படும் அபாயம் அதிகம்.
இதயநோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் கூட போதைப்பொருள் பாவனை ஏற்படுததுகின்றது.
மதுவுக்கு அடிமையானவர்கள் சிந்திக்கும் திறனின் பாதிப்பை சந்திப்பதுடன் அதிக மனஅழுத்தத்தையும் உணர்வார்கள்.
மனச்சோர்வு, ஞாபகமறதி, தற்கொலை எண்ணங்கள் போன்ற ஆபத்தான உடல் மற்றும் கடுமையான உளநல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றார்கள்.
மூளைச் சிதைவு ஆபாயம் காணப்படுகின்றது.மதுபோதையால் உங்கள் மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடுவதால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகின்றது.
சமூக பிரச்சினைகள்
மதுவுக்கு அடிமையானவர்கள் வாகனம் செலுத்துவதால், விபத்துக்கள் அதிகரிக்கின்றது.அதனால் போதை பொருளுக்கு அடிமையாகாதவர்களும் கூட உயிரை இழக்கும் அபாயம் ஏற்படுகின்றது.
போதைக்கு அடிமையாகியவர்கள் தங்களின் நிலையில் இல்லாததால் குடும்பத்தில் சண்டைகளும் வன்முறைகளும் அதிகரிக்கின்றது.
அதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்டுவதுடன் மனநிலையும் வலுவாக பாதிக்கப்படுகின்றது.
வேலைக்குச் செல்லாமல் மதுபானத்தைப் பற்றியே சிந்திக்கத் தோன்றும். இதனால் பணப்பிரச்சினைகள், உறவு முறிவு, தொழிலில் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது போன்ற குற்றசெயல்கள் அதிகரிக்கின்றது.
சிகிச்சைகள்
மது போதையில் இருந்து வெளிவர வேண்டும் என ஒருமுறை மாற்றம் செய்யத் தொடங்கிய பின் அவற்றைத் தொடர்ந்து செய்ய தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மனநல மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ ஆலோசித்து மதுப் பழக்கத்தைக் கைவிடும் முயற்சியை சரியான முறையில் முன்னெடுத்தல்.
மதுப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளைக் கையாள மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ளல்.
இந்தப் பழக்கத்தினால் நம்முடைய பணம் எவ்வளவு செலவாகிறது. அது பொருளாதார ரீதியாக எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
முக்கியமாக இது தொடர்பான சரியான புரிதலும் விழிப்புணர்வும் தேவை அதனை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று முழு மனதோடு நினைத்தாலே அந்தப் பழக்கத்தை விட்டுவிடலாம்.
போதைப் பழக்கத்தைத் தூண்டும் விதமான சூழ்நிலை, நண்பர்கள், இடம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி முகம், வாய், உதடுகள், பற்களை கண்ணாடியின் முன் நின்று பார்க்க வேண்டும். அப்போது, போதைப் பொருள்கள் எப்படியெல்லாம் முகத் தோற்றைத்தைக் குலைக்கிறது என்பதை உணர முடியும்.
போதைப் பொருள் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
அல்லது சுவிங்கம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடலாம். போதைப் பழக்கத்தை முதலில் கைவிடும்போது உடல் சோர்வு, தூக்கமின்மை, எரிச்சல் போன்றவை ஏற்படும்.
அப்போது, இளநீர், மோர் போன்ற இயற்கையான நீராகாரங்களைப் பருகலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொள்ளலாம்.
ஜிம், யோகாசனம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இசை கேட்பது, நடனம் ஆடுவது அல்லது ஏதாவது ஒரு பயிற்சியில் சேர்வது போன்ற செயல்களில் ஈடுபமுவதும் இந்த பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட பெரிதும் துணைப்புரியும்.
Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |