முட்டையுடன் இதை சேர்த்து போடுங்க - ஒரு மாதத்தில் ஒரு அடி முடி வளரும்
தலைமுடியின் உதிர்வு அதிகமாக இருந்தால் அதற்கு இரசாயன பொருட்கள் பயன்படத்துவதை விட வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால் அது அதிக நன்மை தரும்.
பொதுவாக தற்போது இருக்கும் சமூகத்தினருக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கும். தலைமுடி உதிர்விற்கு பல காரணங்கள் இருக்கும் ஆனால் அதற்குரிய ஊட்டச்சத்தை நாம் எதோ ஒரு வழியில் வழங்கும் போது ஓரளவிற்கு முடி உதிர்வு கட்டுப்படும்.
இந்த தலைமுடி உதிர்விற்கு முட்டை ஒரு நிவாரணியாக இருக்கின்றது. ஆனால் முட்டை மட்டும் தனியாக பயன்படுத்தினால் பெறுபேறு கிடைக்க தாமதமாகும். எனவே முட்டையுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் முடி உதிர்வு கட்டுப்படும்.
முடி உதிர்விற்கு முட்டை
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் - ஒரு சிW பாத்தரத்தில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முடியின்மயிர்கால்களில் படும்படி தடவி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் உங்களுக்கு பிடித்த சம்பூ கொண்டு குளிர்ந்த நீரால் தலைமுடியை கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை ஹேர் பேக் போட்டு வந்தால், தலைமுடி வலிமையாகி, முடி உதிர்வது தடுக்கப்படும்.
முட்டை மற்றும் தயிர் - இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இது ஒரு பேஸ்ட் கலவை போல வரும்.
பின்பு அதை தலைமுடியில் தடவி, 1/2 மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின் ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவ வேண்டும். இந்த ஹேர் பேக் முடியை வலிமைப்படுத்துவதோடு, தலைமுடியை பட்டுப்போன்று மென்மையுடன் வளர செய்யும்.
முட்டை மற்றும் தேன் - இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு சிறு பாத்திரத்தில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதை தலைமுடியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதை நீங்கள் வழமையாக பயன்படுத்தும் ஷாம்பூ கொண்டு கழுவினால் முடி உதிர்வு நிற்கும்.
முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் - இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அதை தலைமுடியில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அடுத்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரம் 1-2 முறை பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |